இனிமையான குரலால் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் நினைவு தினம்.!
Sirkazhi Govindarajan's death anniversary
கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான திரு.சீர்காழி S.கோவிந்தராஜன் அவர்கள் நினைவு தினம்.
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார்.
பி.எஸ்.செட்டியார், அவர்களின் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
1953ஆம் ஆண்டு பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஒளவையார் திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.

சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தன் இனிமையான குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55வது வயதில் 1988 மார்ச் 24 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Sirkazhi Govindarajan's death anniversary