அணு ஆயுதம் தாக்கினால் இதை செய்யகூடாது! எச்சரிக்கை செய்யும் அமெரிக்கா! - Seithipunal
Seithipunal


கண்டிஷனரை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது!

அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை பற்றி அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு அணு ஆயுதம் வெடித்தால் அதிலிருந்து கதிரியக்க தூசிகள் மேகங்களைப் போல காற்றில் பரவி பழமையில் தூரம் கடக்கும். கதிரியக்க துகள்கள் உடலில் உள்ள செல்களை சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தும். 

மக்கள் செங்கல் அல்லது கான்கிரீட் கட்டிடத்துக்குள் தஞ்சம் அடைவதால் கதிர்வீச்சை தவிர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் கண்கள் மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும். 

கதிர்ச்சி சமயத்தில் சீக்கிரம் குளிக்க வேண்டும் என்று மக்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குளிக்கும்பொழுது ஷாம்பை பயன்படுத்தலாம் ஆனால் கண்டிஷனரை உபயோகப்படுத்தக் கூடாது. 

ஏனெனில் ஷாம்பை பயன்படுத்தும் போது அது உங்கள் தலைமுடியில் ஒட்டிக்கொண்டு உள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் தூசிகளையும் நீக்கும். ஆனால் கண்டிஷனரை உபயோகப்படுத்தினால் உங்கள் முடிவில் இருக்கும் கதிரியக்க தூசிகளுக்கு இடையில் ஒரு பசை போல் செயல்பட்டு கதிரியக்க தூசிகள் முடியில் ஒட்டிக் கொள்ளும். முடிகள் எதிர்மறையாற்றல் கொண்டவை அதேசமயம் கண்டிஷனர்கள் நேர்மறை ஆற்றல் கொண்டவை. இவை ஒன்றை ஒன்று ஈர்க்கும் பொழுது கதிர் இயக்க தூசிகளுக்கு பசையாக மாறிவிடும்.

இதனால் அணு உலை விபத்து அல்லது அணு ஆயுத தாக்கலையின் போது கண்டிஷனரை உபயோகப்படுத்தக் கூடாது.அணு உலை விபத்து அல்லது அணு அயுத தாக்குதல் ஏற்பட்டால் அச்சமயத்தில் கண்டிஷனரை பயன்படுத்தினால் நம் உயிருக்கு ஆபத்தாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This should not be done in case of a nuclear attack Warning America


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->