அதிபர் பதவி விலகக்கோரி பெரு தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் பேரணி.! - Seithipunal
Seithipunal


பெரு தலைநகரில் அதிபர் பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி நடத்தினர்.

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த டிசம்பர் மாசம் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக, துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.

இந்நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை அரசுக்கு எதிரான போராட்டத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெருவின் தலைநகர் லிமாவில் அதிபருக்கும் எதிராக நேற்று அமைதியான முறையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் பேரணி நடத்தினர். மேலும் அதிபரும் பதவி விலக கோரியும், அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thousands march in Peru capital demanding president step down


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->