மலாவியில் பிரெட்டி சூறாவளி புயல் - 300 -க்கும் மேற்பட்டோர் பலி.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில், "பிரெட்டி" என்ற பருவகால சூறாவளி புயல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

இந்த புயல் குறித்து மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடபட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், "பிரெட்டி சூறாவளி புயலால் தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி பாதிக்கப்படும். 

இந்த பாதிப்பை ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு நேற்று சூறாவளி புயலால் பரவலாக பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த சூறாவளி புயலால் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் மாயமாகி உள்ளனர். அதனால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three hundrad peoples died for freddy cyclone in malavi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->