துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! மூன்று பேர் பலி - 200 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாகவே துருக்கி - சிரியாவின் எல்லையில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்தது. அந்த நிலநடுக்கத்திற்கான மீட் பு பணியே இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. 

இந்த நிலையில், துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த பதற்றம் மறைவதற்குள் சிறிது நேரத்தில் துருக்கியின் ஹடாய் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரைக்கும் மூன்று பேர் பலியாகி உள்ளனர். சுமார் 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால், துருக்கியின் மூன்று இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died and two hundrad peoples injury for earthquake in turkey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->