அமெரிக்காவில் டிக் டாக் செயலியை அகற்றுவதற்கு 30 நாட்கள் கால அவகாசம்.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உருவாக்கப்பட்ட பிரபல சமூக வலைத்தளமான `டிக்-டாக்' செயலி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளன. 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் `டிக்-டாக்' செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் அரசின் மின்னணு சாதனங்களில் `டிக்-டாக்' செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. 

இந்த பரிசீலனையின் படி டிக்-டாக் செயலியை அகற்றுவதற்கு முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் இந்த செயலியை அகற்ற வேண்டும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், நாட்டில் டிக்டாக் செயலியை தடை செய்ய அதிபர் ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இதற்கு முன்னதாக நாட்டின் பாதுகாப்பு கருதி கனடாவில் அரசால் வழங்கப்படும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tok app remove in america with in thirty days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->