இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 2ம் கட்டமாக நிவாரணப் பொருட்கள்.. அமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ. 15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பிலான 137 வகையான உயிர் காக்கும் அத்தியவசிய மருந்து பொருட்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் தூத்துக்குடியில் இருந்து உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Relief items to sri lanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->