கியூபாவில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் தீ விபத்து.! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.! - Seithipunal
Seithipunal


கியூபாவில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

கியூபாவின் மிகப்பெரிய புகையிலை உற்பத்தி பகுதியான பினார்டெல் ரியோ மாகாணத்தில் அந்நாட்டு அரசுக்கு சொந்தமான புகையிலை சேகரிப்பு கிடங்கு மற்றும் உற்பத்தி ஆலையில் திடீரென்று தீ பிடித்துள்ளது.

தீயானது மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததில் அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அதிகளவு கரும் நச்சுப்புகை வெளியேறி உள்ளது.

இதனால் சுமார் 30 டன் அளவிலான விற்பனைக்கு தயாராக இருந்த புகையிலை பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tobacco factory fire in cuba


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->