இன்று முதல் ட்விட்டரில் மீண்டும் புளு டிக் வசதி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார்.அதன் பின்னர் ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

முதலில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பணியில் இருந்து விளக்கினார். அதன் பின்னர் டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்துவதற்காக அவர்களுடைய பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு அதாவது புளூ டிக் அமைக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு புளூ டிக் உள்ள பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் தலைமை அதிகாரி எலான் மஸ்க், டுவிட்டரில் 'புளூ டிக்' வசதியை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் எட்டு அமெரிக்க டாலர் அதாவது ரூ.659 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று  அறிவித்தார். 

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் எலான் மஸ்க் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார். இந்நிலையில், டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகியதன் காரணமாக 'புளூ டிக்' வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று முதல் டுவிட்டரில் மீண்டும் 'புளூ டிக்' வசதி கிடைக்கும் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் ஒருபகுதியாக முதலில் வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும். அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகளின் சரிபார்ப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today again start blue tik in twiter


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->