மியான்மரில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - Seithipunal
Seithipunal


மியான்மரில் (வெள்ளிக்கிழமை) இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

மியான்மரின் மொனிவாவின் வடமேற்கே சுமார் (69.59 மைல்) 112 கிலோமீட்டர் தொலைவிலும், (89.48 மைல்) 144 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரை கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருட்சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Earthquake in Myanmar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->