அமைதியான முறையிலே அதிகார மாற்றம் நடைபெறும்: ஜோ பைடன்
Transition of power will happen peacefully Joe Biden
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில், மக்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தற்போதைய அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய கருத்துகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:
அமெரிக்கா உலக வரலாற்றில் சுயாட்சியின் முக்கிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது. மக்கள் அமைதியாக வாக்களித்து தங்கள் தலைவரை தேர்வு செய்தனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர் டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, அவரின் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இது மக்கள் விருப்பத்திற்கு இணங்க அமைதியான அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்தும்.
கமலா ஹாரிஸ் எனது உறுதியான கூட்டாளி மற்றும் பொது சேவையில் பெரும் ஆர்வமுள்ளவர். தீவிரமாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் மக்களின் முடிவை மதிப்பது என்பதால், அதை நமது நாட்டின் ஒற்றுமையாக ஏற்றுக்கொள்வோம்.
எதிர்காலத்தில் அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாட்டை பற்றிய சந்தேகங்கள் எழுந்தால், அதை நேர்மையான, நியாயமான, வெளிப்படையான முறையாக நாம் நம்பலாம். ஜனவரி 20ஆம் தேதி அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறும்."
இவ்வாறு அவர் உறுதியாகக் கூறினார்.
English Summary
Transition of power will happen peacefully Joe Biden