காட்பாடி தொகுதி என் கோவில்.. மக்களெல்லாம் தெய்வம் - அமைச்சர் துரைமுருகன் உருக்கம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே வள்ளிமலை தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

"கடந்த தேர்தலில் உங்களுக்கெல்லாம் சொன்னேன். இந்த முறை எனக்கு வாக்களித்தால், நான்கு திட்டங்கள் வரும் என்று. அதன்படி பொன்னையில் ரூ.48 கோடியில் பாலம் கட்டி கொடுத்துள்ளேன். ஒரு கல்லூரி கொண்டு வந்துள்ளேன். சேர்க்காடு கூட்ரோட்டில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் பயன்பாட்டிற்கு வரும். 

இப்படி பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொண்டு வர சிப்காட் அமைக்கப்படவுள்ளது. காட்பாடி ரெயில் நிலையம் அருகே மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடம் இல்லாத பள்ளிக்கு கட்டிடம் கட்டப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். மகளிருக்கு உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எல்லோரும் என்னை கேட்கிறார்கள் எப்படி சார் ஒரே தொகுதியில் வெற்றி பெறுகிறீர்கள்? என்று, நான் இதனை தொகுதி என்று நினைக்கவில்லை. கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன்.

எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த நீங்கள்தான் என்னுடைய தெய்வம். அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன். சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்து வருகிறேன்.

என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். மற்ற தொகுதியுடன் ஒப்பிட்டு பாருங்கள் மற்ற தொகுதிகளை விட நான் அதிக திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன்" என்று உருகியபடி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister durai murugan speech about katpadi constituency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->