உக்ரைன் உடனான போரை நிறுத்துங்கள் என, ரஷ்ய அதிபருக்கு டிரம்ப் நேரடி வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் உடனான போரை நிறுத்துங்கள் என ரஷ்ய அதிபருக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நான் ரஷ்யாவை காயப்படுத்த விரும்பவில்லை. நான் ரஷ்ய மக்களை நேசிக்கிறேன். ரஷ்ய அதிபர் புடின் உடன் எப்போதும் நல்ல உறவையே கொண்டிருந்தேன். தீவிர இடதுசாரி நாடாக இருந்த போதும் ரஷ்யாவுடன் நல்லுறவையே வைத்திருந்தேன்.

இரண்டாம் உலகப்போரை வெற்றி கொள்வதற்கு ரஷ்யா பேருதவியாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த போரில் ரஷ்யாவைச் சேர்ந்த 06 கோடி பேர் உயிரிழந்தனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 

இப்போது ரஷ்ய பொருளாதாரம் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது. நான் ரஷ்ய அதிபருக்கு சொல்வது எல்லாம் இந்த கேலிக்கூத்தான போரை நிறுத்துங்கள் என்பதுதான். இந்த போர் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேதான் போகும்.

இப்போது நாம் ஒரு உடன்பாடு ஏற்படுத்தவில்லை என்றால், எனக்கு வேறு வழியில்லை. விரைவில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனையாகும் ஒவ்வொன்றுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டியிருக்கும்.

தடைகளையும் அதிகப்படுத்த வேண்டி இருக்கும். வேறு சில நாடுகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டி இருக்கும்.

நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போரே நடந்திருக்காது. இந்தப் போரை இப்போதே முடித்துக் கொள்ளலாம். எளிதான வழி, கடினமான வழி என இரண்டு வழிகள் நமது முன் உள்ளன. அவற்றில் நாம் எப்போதும் எளிதான வழியே தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது நாம் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்று  அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump directly appeals to Russian President to stop war with Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->