பலி எண்ணிக்கை 50,000-தை கடக்க வாய்ப்பு - அதிரவைத்த ஐநா!
turkey eartquake UN Info
கடந்த ஆறாம் தேதி துருக்கி நாட்டின் தெற்கு பகுதியிலும், சிரியா நாட்டின் வடக்கு பகுதியிலும் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
48 மணிநேரம் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு சேதாரம் உலக நாடுகளை அதிர்ச்சி கொள்ளாக்கும் வகையில் அரங்கேறியது.
இந்தியாவிலிருந்து மீட்பு பணி குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆறு நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை இன்று காலை கடந்தது.
இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு ஆறு நாட்கள் ஆகியதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 33 ஆயிரத்து தாண்டி உள்ளது. இதில் துருக்கியில் 29 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3574 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடுப்பாடுகளுக்குள் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மேலும் பலி எண்ணிக்கை 50,000 கடக்க வாய்ப்புள்ளதாக ஐநா கணித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.