சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறிவைத்து துருக்கி ஏவுகணை தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறி வைத்து துருக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிரியாவின் வடக்கு மாகாணமான அலெப்போ மற்றும் வடகிழக்கு மாகாணமான ஹசாகே பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய-குர்தீஷ் படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஷமி தெரிவித்துள்ளார்.  

இந்த 2 மாகாணங்களிலும் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சிரிய மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சிரிய-குர்திஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பிற்கு குர்திஸ் அமைப்பு தான் காரணம் என்று துருக்கி குற்றம் சாட்டியநிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey missile attack targeting the northern provinces of Syria


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->