ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா சேவை நிறுத்தம் - எலான் மஸ்க் தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன்வயப்படுத்தினார். 

அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனத்தில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர்.

இதில் உள்ள கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். 

இந்தக் குறியீட்டின் மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தச் சேவையை இந்தியாவில் பெற வேண்டும் என்றால் மாதம் ரூ. 719 செலவாகும். 

இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை தற்போது டுவிட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ டிக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter blue tik hold elon musk information


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->