தொடரும் சோகம் - அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் பார்சி உள்ளிட்டோர் அமெரிக்க அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே நேருக்குநேர் கார்கள் மோதிய விபத்தில், சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், நிவேஷ் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசூராபாத் நகரைச் சேர்ந்தவர் என்பதும், கெளதம் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன் கான்பூரைச் சேர்ந்தவர் என்பதும், இவர்கள் இருவரும் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படித்து வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two indian students died in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->