நார்வே.! இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நார்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு கேளிக்கை விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கேளிக்கை விடுதிக்குள் திடீரென மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two persons killed in Norway shooting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->