பிரிட்டன் வரலாற்றில் முதல்முறை | பிரதமராக இந்திய வம்சாவளி!
UK Prime Minister Rishi Sunak
கடந்த மாதம் இங்கிலாந்து புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார நடவடிக்கைகள் சீர்திருத்தம் மேற்கொள்ண்டதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றது.
இதன் எதிரளொளியாக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். தொடர்ந்து இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகினார்.
இதனை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி வருகின்ற 28ஆம் தேதி புதிய பிரதமரை தேர்வு செய்யப்படும் என அறிவித்தது. பிரதமர் போட்டியில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் 140 பேர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் 100 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் பென்னி மார்டன்ட் மற்றும் ரிஷி சுனக் இடையே நேரடி போட்டி உருவாகிய நிலையில், பென்னி மார்டன்டும் போட்டியிலில் இருந்து விலகினார்.
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரிஷி சுனக்-கிற்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆக உள்ளார். நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் (42 வயது) பெற்றுள்ளார்.
English Summary
UK Prime Minister Rishi Sunak