பிரிவினைவாத டொனெட்ஸ்கில் உள்ள மேயர் அலுவலகம் மீது தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.

மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய அதி நவீன ஹிமார்ஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய முன்னேறி வருகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளது.

இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் கிரெம்ளின் ஆதரவு பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்கின் மீது உக்ரைன் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் டொனெட்ஸ்கின் மேயர் அலுவலகத்தை அதிநவீன அமெரிக்கா ஹிமார்ஸ் ராக்கெட்டுகள் மூலம் உக்ரைன் படைகள் தாக்கியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்,  அலுவலக கட்டிடங்கள் மற்றும் அருகிலிருந்த கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தாக்குதலுக்கு இன்னும் உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine attack on mayor office in Donetsk region


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->