ரஷ்யா-பெலாரஸ் இடையே விமான போர் பயிற்சி தொடக்கம்.! அச்சத்தில் உக்ரைன்
Ukraine fears as Russia Belarus starts air exercise
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது போர் 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போருக்கு மத்தியில் ரஷ்யாவும் அதன் அண்டை நாடான பெலாரஸும் இன்று கூட்டு இராணுவ விமானப்படை பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன. இந்த பயிற்சி ஜனவரி 16 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெறும் என்றும், பயிற்சியில் பெலாரஸுன் அனைத்து விமான நிலையங்களும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியானது தற்காப்புக்கானது என்றும், பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் விமானங்கள் போரில் பயன்படுத்தப்படாது என பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பெலாரஸுடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த போர் பயிற்சி உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலில் பெலாரஸுன் போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
English Summary
Ukraine fears as Russia Belarus starts air exercise