அதிர்ச்சியில் உக்ரைன்!...ஒரே இரவில் 100 டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா,  உக்ரைன் மீது போர் தொடுத்தது.  உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக புதின் அண்மையில் அறிவித்தார். தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், 101 உக்ரைன் டிரோன்களை ஒரே இரவில் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 53, கிராஸ்னோடர் பகுதியில் 18, மற்றும் கலுகா, ட்வெர் மற்றும் அசோவ் கடலுக்கு அருகே பல டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine in shock Russian army destroyed 100 drones overnight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->