ரஷ்யா தீவிர தாக்குதல்.! பாக்முட் பகுதியிலிருந்து நடந்தே வெளியேறும் உக்ரைன் மக்கள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரைன் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் டொனெட்ஸ்க் நகரங்களை கைப்பற்ற பாக்முட் நகரம் உதவியாக இருக்கும் என்பதால் அப்பகுதியை கைப்பற்ற ரஷ்யா, படைகளை குவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாக்முட் பகுதியில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் உக்ரைன் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பாக்முட் நகரத்தில் முக்கிய வழித்தடங்கள் மற்றும் பாலங்கள் ரஷ்யப்படைகளால் அழிக்கப்பட்டுள்ளதால் நகரத்தை சுற்றி போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாக்முட் நகர மக்களின் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி சிறைபிடிக்கக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் உக்ரைன் படைகளின் உதவியோடு வெளியேறி வருகின்றனர். மேலும் உக்ரைன் வீரர்களின் வாகனங்களில் சென்றால் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் மக்கள் நடந்தே நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine people leaves bakhmut on foot due to Russian attack


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->