ரஷ்ய அதிபரின் உத்தரவை மீறி அரங்கேறிய திடீர் தாக்குதல்!
Ukraine Russia War 2023
ரஷ்ய அதிபர் புதினின் போர் நிறுத்த உத்தரவை மீறி, கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பத்து கடந்துவிட்ட நிலையில், ரஷ்யா தனது தீவிர தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
போரின் ஆரம்பம் முதலே கெர்சன் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷ்யா, உக்ரைன் படைகளின் தீவிர தாக்குதலினால் கெர்சன் பகுதியிலிருந்து ரஷ்யப்படைகள் வெளியேறின.
இந்நிலையில், உக்ரைனில் தற்காலிக போர் தற்காலிக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய ராணுவம் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் போர்நிறுத்த உத்தரவை மீறி கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் இன்று தாக்குதல் நடத்தி உள்ளன.
உக்ரைனின் பாக்முட்டில் ஷெல் நகரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எதிர்தரப்பினரை நோக்கி ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.