ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட மாகாணத்தில் முன்னேறும் உக்ரைன் படைகள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய நான்கு மாகாணங்களை கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. 

இப்போரில் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள் ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனிடையே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கெர்சன் மாகாணத்தில், கொ்ஷெனிவ்கா பகுதியில் உக்ரைன் தேசிய கொடி பறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கெர்சன் பகுதியில் உக்ரைன் படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகள் கிடைத்து வருவதாக அசோசியேட் பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொ்ஷெனிவ்கா பகுதியை ஆக்கிரமித்த ரஷ்ய படைகள், உக்ரைன் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெளியேறியதால் அப்பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா படைகளுக்கு உணவு மற்றும் ஆயுதம் கொண்டு வரும் முக்கிய பாலங்களை தகர்த்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் உக்ரைன் படைகள் அப்பகுதி முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine troops advance in kherson Province


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->