இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் நிறுத்தம்: ரஷியா கொண்டுவந்த அழைப்பு நிராகரிப்பு!
un security council rejects Russian resolution
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதனால் இருபுறமும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. 11 வது நாளாக தொடர்ந்து இன்றும் இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே ரஷ்யா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம், பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும், பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தில் ஹமாஸ் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் ஹமாசை முறையாக விமர்சிக்கவில்லை எனவும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
English Summary
un security council rejects Russian resolution