நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கிக்கு மேலும் 100 மில்லியன் டாலர் உதவி - அமெரிக்கா அறிவிப்பு - Seithipunal
Seithipunal


நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கிக்கு மேலும் 100 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியா எல்லை நகரங்களில் கடந்த 6ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிரியா மற்றும் துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்நிலையில் இந்த பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கி-சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,402 ஆகவும், சிரியாவில் 5,800க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், துருக்கிக்கு மேலும் 100 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடான சிரியாவுக்கு உதவிகள் செய்வதில் சில தடைகள் இருப்பதாகவும், மனிதாபிமான அடிப்படையிலான விவகாரத்திற்கு அந்த தடைகள் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக அமெரிக்கா, துருக்கிக்கு 85 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US announced 100 million dollar aid to earthquake hits Turkey


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->