பிரதமர் நரேந்திர மோடிக்கு டி- சர்ட்டை பரிசாக வழங்கிய அமெரிக்க அதிபர்.!!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடிக்கு டி- சர்ட்டை பரிசாக வழங்கிய அமெரிக்க அதிபர்.!! 

பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்தவகையில், நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது, பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் சிறப்பு டி- சர்ட் ஒன்றை பரிசாக வழங்கினார். அதில், ஏஐ பற்றிய மேற்கோள் அச்சிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, " 'எதிர்காலம் AI - அமெரிக்கா & இந்தியா'. 

கடந்த சில ஆண்டுகளில், AI- செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு AI- அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இன்னும் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி இந்த புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US president jo bidan t shirt gift to prime minister modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->