எழுத்தாளரை கொலை செய்பவருக்கு பரிசு அறிவித்த ஈரான் அமைப்பு.! பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


1988ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ், அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி எழுதிய "சாத்தானின் கவிதைகள்" என்ற புத்தகம் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அப்போதைய ஈரான் மதகுரு அயதுல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு மரணதண்டனை விதித்தார்.

இதையடுத்து தலைமறைவாய் வாழ்ந்து வந்த சல்மான் ருஷ்டியின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு கண் பார்வை மற்றும் ஒரு கையின் செயல்பாட்டை இழந்தார்.

இதனிடையே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் வெகுமதியாக வழங்கப்படும் என்று ஈரான் நாட்டைச் சேர்ந்த கோர்டாட் பவுண்டேசன் அமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானின் கோர்டாட் பவுண்டேசன் அமைப்பின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. இதற்கான அறிவிப்பை அமெரிக்கா நிதி துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ளது.

மேலும் உலகளாவிய கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் சர்வதேச மத சுதந்திரம் ஆகியவற்றிற்கு ஈரான் ஆட்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை வேடிக்கை பார்க்காது என்றும், எழுத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் தனது நிலைப்பாட்டை ஒருபோதும் கைவிடாது என்று அமெரிக்கா நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US sanction Iran organization that gives reward for murder of writer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->