எதிர்வரும் 21-ஆம் தேதி அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியை சந்திப்பார் என தகவல்..!
US Vice President to visit India on 21st
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேம்ஸ் டேவிட் வென்சி எதிர்வரும் 21-ஆம் தேதி இந்தியா வரவுள்ளார். இவரது மனைவி உஷா சிலுக்குரி வென்சி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், 04 நாட்கள் பயணமாக 21-ஆம் தேதி மனைவி உஷாவுடன் இந்தியாவுக்கு வரும் அவர், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவுக்கு குடும்பத்துடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பயணத்தின் போது அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேம்ஸ் டேவிட் வென்சி உடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்க் வாட்ஸ்சும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, உலக அளவில் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary
US Vice President to visit India on 21st