சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு அடிப்பணிய மாட்டோம்...பயப்படமாட்டோம்.. - தைவான் துணை அதிபர்!
Vice President of Taiwan
சீனா, தங்களது நாட்டின் ஒரு பகுதி என தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக உள்ளது.
சீன போர் பயிற்சிகள் சமீபத்தில் தைவானை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அமெரிக்கா தைவான் உடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டது.
இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லியம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவி ஏற்பு விழாவிற்கு கலந்து கொள்ள சென்றார்.
அவர் செல்லும் வழியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார். அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தைவான் துணை அதிபர் வில்லியம், சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ''நீண்ட கால உயிர் வாழ்வை தைவானின் சர்வதேச சமூக அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நாங்கள் தைவான் சர்வாதிகார அச்சுறுத்தல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அடிபணிய மாட்டோம், பயப்படமாட்டோம். சுதந்திரத்தின் மதிப்புகளை நிலை நிறுத்துவோம்'' என தெரிவித்தார்.