வியட்நாம் புயல் பாதிப்பு! பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு!
Vietnam storm damage The death toll has risen to 141
லிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிக கொடூராமாக தாக்கியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி புயல் தாக்கியது.
தலைநகர் ஹனோயில் யாகி புயல் மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி கரையை கடந்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான சூறாவளி புயலாக வியட்நாமில் கருதப்படும் இந்த யாகி புயல், அந்த நாட்டை முழுவதுமாக தாக்கியது.புயல் காற்றை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.
இதனால் அப்பகுதில் உள்ள நீர்நிலையங்கள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தாக்கியது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவைகளில் தண்ணீர் நுழைந்து தத்தளித்து வருகின்றன.
இதனையடுத்து, அந்த பகுதியில் அமைந்துள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஆற்றின் குறுக்கே நிறுவப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று துண்டு துண்டாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியட்நாம் நாட்டின் பேரிடர் நிர்வாகம் இந்த புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 141 ஆக உயர்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு 69 பேரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் படு காயமடைந்துள்ளனர். வியட்நாமை இந்த யாகி புயல் தாக்குவதற்கு முன்பு, தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த சூறாவளி புயல் தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vietnam storm damage The death toll has risen to 141