திருத்தணி: ஆந்திரா மாநிலம் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தல், 15 கிலோ கஞ்சா பறிமுதல் - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

இதனைத் தடுக்க, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திருத்தணி அருகே உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆந்திர எல்லை பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த பேருந்தில் பேக்கில் மறைத்து வைத்திருந்த சுமார் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா கடத்தல் தொடர்பாக ஆர்கே பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் சந்தித்து விசாரித்த நிலையில், சென்னை சேர்ந்த முருகன் (44) மற்றும் பூந்தமல்லி கரையான் சாவடியைச் சேர்ந்த ரவி (45) ஆகியோர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி சென்னைக்கு கடத்துவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் மீது போலீசார் விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruthani Drug trafficking from Andhra state to Tamil Nadu 15 kg of ganja seized


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->