மதுரை || தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள புதூர் அருகே தனியார் மருத்துவமனையின் 3-வது மாடியில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது இந்த மருத்துவமனை செயல்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையை காலி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

மேலும், இந்த மருத்துவமனையில் தற்போது செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in private hospital at madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->