கொரோனா தொற்று இன்னும் பொது சுகாதார அவசரநிலையாகவே நீடிக்கிறது - உலக சுகாதார மையம் - Seithipunal
Seithipunal


சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலக நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் பரவி வருகிறது. உலகில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இந்த தொற்றினால் ஏற்படுகிற உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று நோய் இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகவே நீடிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசர குழு, மற்ற சுவாச வைரஸ்களுடன் ஒப்பிடும்போது கொரோனா இறப்புகள் அதிகமாகவே உள்ளன. கொரோனா தொடர்பான சிக்கல்கள், கொரோனாவுக்கு பிந்தைய நிலைகள், அதன் தாக்கங்கள் எல்லாமே இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO has said Corona remains a public health emergency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->