உலகின் மிக வயதான நாய் மரணம் - இரங்கல் தெரிவித்த கின்னஸ் அமைப்பு.!
world oldest dog died in portukal
ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள போர்ச்சுகல் நாட்டினை பூர்விகமாக கொண்ட ரஃபீரோ இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை லியோனல் கோஸ்டா என்பவர் வளர்த்து வந்தார். பாபி என்று பெயரிடப்பட்ட அந்த நாய் சுமார் 31 ஆண்டுகள் 165 நாள் வரை உயிர் வாழந்தது.
இந்த நிலையில் பாபி, கடந்த வார இறுதியில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. சராசரியாக 10 முதல் 14 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுள் கொண்ட இந்த வகை நாய் இனத்தில் பாபி எப்படி 31 ஆண்டுகள் வாழ்ந்தது என்பது பெரும் புதிராகவே உள்ளது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது நாய் தான், உலகின் மிக வயதான நாய் என்று கின்னஸ் சாதனை படைத்திருந்தது. ஆனால், அதனை பாபி முறியடித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக வயதான நாய் உயிரிழந்திருப்பது அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
world oldest dog died in portukal