தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்த உலகின் முதல் 'முஸ்லீம் இமாம்' மர்ம நபர்களால் சுட்டுக் கொலை..!
Worlds first openly gay Muslim imam shot dead
உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் (57) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா (Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் வேறு ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள் வழியைத் தடுத்துள்ளது. அப்போது, முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தின் போது இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் காரின் பின்புறம் அமர்ந்திருந்துள்ளார். அவர் குண்டு பாய்ந்து உயிரிழந்ததோடு, வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்துள்ளார். குறித்த தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்ததோடு, கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, ILGA நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் கவலை தெரிவித்துள்ளார். அதுதுடன் அவர் இது குறித்து தெரிவிக்கையில், சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இதனை கண்டித்துள்ளது.
"முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் 1996-இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Worlds first openly gay Muslim imam shot dead