38 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த உலகின் மிகப்பெரிய எரிமலை - 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை
Worlds largest volcano erupts after 38 years in America
உலகின் மிகப்பெரிய எரிமலை மவுனா லோவா அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வரும் நிலையில், எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக நெருப்புக் குழம்பு முடிந்திருக்கின்றன என்பதால் அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும், நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை புவியியல் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Worlds largest volcano erupts after 38 years in America