எக்ஸ் தளத்திற்கு பிரேசில் நாட்டில் தடை! - எலான் மஸ்க் கண்டனம்! - Seithipunal
Seithipunal


உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றி அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். எக்ஸ் தளத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி அங்கு பணியாற்றிய ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். இதனை தொடர்ந்து, அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  பிரேசில் உச்ச நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்து, அடுத்த 24 மணி நேரத்தில் பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை  நியமிக்க வேண்டும். தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனையடுத்து, எக்ஸ் தளத்திற்கு பிரேசில் நாட்டில் தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எக்ஸ் தளத்தை அடுத்த  24 மணிநேரத்திற்குள் பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.

மேலும், VPN போன்றவற்றை பயன்படுத்தி எக்ஸ் ஆப்பை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், எலான் மஸ்க் பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.மேலும், எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரேசில் நாட்டில்  பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

X site banned in Brazil Elon Musk Condemned


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->