உ.பி.யில் ஜீவசமாதியாக முயற்சித்த வாலிபர்.! சரியான நேரத்தில் உயிருடன் மீட்ட போலீசார்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலம் உன்னாவ் அருகே வாலிபர் ஒருவர் ஜீவசமாதி அடைந்ததாக கூறி, குழியில் உயிருடன் புதைத்து சாதுக்கள் பூஜை நடத்தி வந்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூங்கில் கம்புகள் மீது பாலிதீன் பைகள் போட்டு, அதன் மீது களிமண்ணால் மூடப்பட்டிருந்த இருந்த குழிக்குள் இருந்து வாலிபர் ஒருவரை உயிருடன் மீட்டனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தாஜ்பூர் பகுதியை சேர்ந்த ஷுபம்(22) என்ற வாலிபர் தனது தாயார் மறைவுக்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக ஊருக்கு வெளியே குடிசை போட்டு காளி வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் நவராத்திரியின் போது ஜீவசமாதி அடைபவர்கள் முக்தி பெறுவார்கள் என்று சில சாதுக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதுக்களின் பேச்சை நம்பி இந்த வாலிபர் முக்தி அடைய குழிக்குள் இறங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் குழியில் இருந்து உயிருடன் மீட்ட வாலிபர், சாதுக்கள் மற்றும் வாலிபரின் உறவினர்கள் என 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man committed to samathi to get mukthi in uttarpradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->