மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் ; 05 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!
Youth trapped in the rubble of the Myanmar earthquake Rescued alive after 05 days
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம், தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியதோடு, இதுவரை 03 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன், கிட்ட தட்ட 05 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். அதேவேளை, நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 441 பேர் மாயமாகியுள்ளனர்.
தற்போது அங்கு துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று நடந்த மீட்பு பணியின்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இளைஞர் 05 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் நேபிடாவில் இன்று நடைபெற்ற மீட்பு பணியின்போது 26 வயதான இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.
இடிந்து விழுந்த ஓட்டல் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய இளைஞரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக, மீட்புப்பணியின் 04-வது நாளான நேற்று கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கிய 63 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Youth trapped in the rubble of the Myanmar earthquake Rescued alive after 05 days