படைகளை திரும்ப பெறாமல் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியாது - ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரினால் இரு நாடுகளுக்கும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், போரை முடிவுக்கு கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

போர் தொடங்கியபின் முதல் முறையாக உக்ரைன் சென்றுள்ள துருக்கி அதிபர் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனையில் படைகளை திரும்ப பெறாமல் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் ரஷ்யா உடன் உக்ரைன் நடத்தாது என அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா அமைதிக்கு தயாராக இருப்பதாக எர்டோகன் கூறியதையடுத்து, தான் மிகவும் ஆச்சரியமடைந்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky say there can be no peace talks without the withdrawal of troops


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->