உக்ரைன் கிழக்குப் பகுதியில் நிலைமை கடினமாகி வருகிறது - ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் படைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா ஷெல் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

அதேசமயம் உக்ரைனின் தெற்கு நகரமான ஒடேசாவில் மின்உற்பத்தி நிலையத்தின் மீது ரஷ்யப்படைகள் தாக்கியதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனின் கிழக்குப்பகுதியில் நிலைமை கடினமாகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் பாக்முட், வுஹ்லேடர், லைமன் மற்றும் பிற பகுதிகளில் ரஷ்ய படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, உக்ரைனின் எல்லை பாதுகாப்பை உடைப்பதற்காக ரஷ்யா அதிகளவு வீரர்களை ஈடுபடுத்துவதாகவும், கிழக்கு நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky says situation in east getting tough


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->