உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் - அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் பாக்குமுட் நகரத்தை கைப்பற்ற தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்களை வழங்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த உக்ரைன் அதிபர், போரின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா எங்களுக்கு ஆயத உதவிகள் வழங்கி முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. போரில் உக்ரைன் வெற்றி பெற எப்-16 போர் விமானங்கள் தேவை. அந்த விமானங்கள் தான் உக்ரைன் வெற்றியை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நடந்த உரையாடலின் பொழுது போர் விமானங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா அதிபர் புடினை எந்த சூழ்நிலையிலும் பேச்சுவார்த்தைக்காக சந்திக்க வாய்ப்பில்லை என்றும், உக்ரைனிலிருந்து ரஷ்யா படைகள் வெளியேறிய பின்னரே தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky urges to give warplanes to Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->