முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்ட 'சூதாட்ட சொகுசு கப்பல்' விரட்டியடிப்பு.!
ship issue in puducherry
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சொகுசு கப்பல் இரண்டாவது முறையாக புதுச்சேரியில் நுழைய முயன்றபோது, தடுத்து நிறுத்தி எச்சரித்து துரத்தி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து 'சூதாட்ட சொகுசு கப்பல்' என்று குற்றம் சாட்டப்படும் கப்பலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அந்த சொகுசு கப்பல் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ் கடல் பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று வர பயணத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சொகுசு கப்பலில் தமிழ் கலாச்சாரத்திற்கு சீரழிவான விவகாரங்கள் இருப்பதால், புதுச்சேரியில் நுழைவதற்கு அனுமதி தரமுடியாது என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இதனால் அண்மையில் புதுச்சேரியில் நுழைய முயன்ற இந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் இன்று காலை புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல முயன்ற இந்த கப்பலை கடலோர காவல்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி எச்சரித்து துரத்தி அடித்தனர்.