சமூக நீதி பேசுவதற்கு அசிங்கமாக இல்லையா? வெட்கமாக இல்லையா? தவேக நிர்வாகி விளாசல்!
TVK Loyola mani condemn to DMK Govt Vengai vayal issue
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ததை கண்டித்து, அந்த ஊர் மக்கள் வைத்த கட் அவுட் பெரும் விவாத பொருளாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த லயோலா மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திராவிட மாடல் பெருமை பேசும் திமுக உங்களுக்கு வேங்கை வயல் ஊர் பொது மக்கள் வாழ்த்துகள் சொல்லி உள்ளார்கள். கேவலம்.
குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த செயல் என்பது தேசிய அவமானம்.
நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் மக்கள் விரோத திமுக அரசின் செயலைக் கண்டிக்கிறோம்.
இந்த அரசாங்கம் சமூக நீதி அரசாங்கம் என்று பேசுவதற்கு அசிங்கமாக இல்லையா? வெட்கமாக இல்லையா?
உண்மை குற்றவாளியை எப்பொழுது கைது செய்வீர்கள்?
திராவிட மாடல் பெருமை பேசுவதை விட்டு விட்டு மலம் கலந்த அயோக்கியர்களை கண்டுப்பிடிக்க வேலை செய்யுங்கள்.
விரைவில் வேங்கை வயல் மக்களையும் எங்கள் தலைவர் சந்திப்பார்.
மக்கள் விரோத மனப்பான்மையுடன் உள்ள திமுகவின் மக்கள் விரோத செயலை மக்கள் அரங்கத்தில் அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Loyola mani condemn to DMK Govt Vengai vayal issue