தர்மபுரியில் அதிர்ச்சி! மொட்டை மாடியில் வெடி விபத்து! சிறுமி பலி! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நாட்டு வெடி வெடித்த விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் அபி - நாகமணி தம்பதியின் 6 வயதில் கவிநிலா என்ற மகள், பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டு மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாக சொல்லப்படுகிறது. அந்த மாடியின் மீது தீபாவளி பண்டிகைக்கு வாங்கி மீதம் இருந்து நாட்டு வெடியை காய வைத்திருந்துள்ளனர்.

அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் சிறுமி மிதித்ததால், வெடி வெடித்து விபத்து ஏற்பட்டு சிறுமி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Crackers blast girl dead Dharmapuri 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->