ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். 

பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

அதாவது, சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.51,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று 6465 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.89 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 07 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->