பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை - எங்குத் தெரியுமா?
pocket liquor ban in puthuchery and karaikkal
தமிழகத்தில் சாராயம் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் சாராய விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் 85 சாராயக் கடைகளும், காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. இதில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பாக்கெட் சாராய விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் பிளாஸ்டிக் சாராய பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி புதுவை மற்றும் காரைக்காலில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
pocket liquor ban in puthuchery and karaikkal