குவைத் தீ விபத்து - உயிரிழந்த தமிழர்களின் உடல்களை அனுப்பும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


வளைகுடா நாடான குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். 

அவர்களில் 7 பேர் தமிழர்கள். தற்போது, இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என்று தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 tamilan dead bodies sending to tamilnadu work going on


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->